இசை - குறுந்தொகை - சகா
சில தினங்களுக்கு முன் ஒரு பாடல் இணையத்தில பார்க்க/கேட்க நேர்ந்தது. முதல் முறை கேக்கும்போதே இசையும் பாடல் வரிகளும் ரொம்ப இனிமையாக இருந்தது. குறுந்தொகையில இருந்து வரிகளை எடுத்து பாடல் சரணமா அமைச்சு இருக்காங்க. அதுதான் ரொம்ப அழகா இருக்கு.பின்னணி இசை பிரமாதம்.. கேட்டு பாருங்க. https://www.youtube.com/watch?v=3wnG9k3VbVE படம் : சகா இசை : சபிர் குறுந்தொகை பாடல் வரிகள் [சரணம்] யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, கலந்தனவே. பாடல் வரிகள் அர்த்தம்: என் தாயும், உன் தாயும் என்ன உறவு ஆகியரோ. என் தந்தையும், உன் தந்தையும் எந்த முறை சொந்தம்? செம்மண் (மழை) நீரோடு இரண்டற கலந்தது போல அன்புடைய நெஞ்சம் ஒன்றாக கலந்தனவே..