இசை - குறுந்தொகை - சகா


சில தினங்களுக்கு முன்  ஒரு பாடல் இணையத்தில பார்க்க/கேட்க நேர்ந்தது.
முதல் முறை கேக்கும்போதே இசையும் பாடல் வரிகளும் ரொம்ப இனிமையாக இருந்தது. 

குறுந்தொகையில இருந்து வரிகளை எடுத்து  பாடல் சரணமா அமைச்சு இருக்காங்க.

அதுதான் ரொம்ப அழகா இருக்கு.பின்னணி இசை பிரமாதம்..
  
கேட்டு பாருங்க.
https://www.youtube.com/watch?v=3wnG9k3VbVE

படம் : சகா 
இசை : சபிர் 

குறுந்தொகை பாடல் வரிகள் [சரணம்]


யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

செம்புலப் பெயல்  நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, கலந்தனவே.

பாடல் வரிகள் அர்த்தம்:


என் தாயும், உன் தாயும் என்ன உறவு ஆகியரோ.

என் தந்தையும், உன்  தந்தையும் எந்த முறை சொந்தம்?

செம்மண் (மழை) நீரோடு இரண்டற கலந்தது போல 

அன்புடைய நெஞ்சம் ஒன்றாக கலந்தனவே.. 

Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..