ஓய் என் கண்ணழகியே..


ஓய் கண்ணழகியே பாடல் வரிகள் மற்றும் இசைக்கோர்வை.




அழகே..
உன் குழலை கோத
அந்த காற்றும் விரையுது..

அழகே..
உன் நிழலை தீண்ட
அந்த நிலவும் கரையுது..

அழகே..
உன் குரலை கேட்க
அந்த குயிலும் முழிக்குது..

அழகே..
உன் புழலை சேர
என் உயிரும் துடிக்குது..

அழகே..
இலை போல உன் தேகம்
இருப்பது ஏதுக்கடி?

அழகே..
அதில் வடியும் நீராக
நான் இருப்பது ஏன்?

அழகே..
என்னை மயங்கி தாழ்த்தும்
அந்த இதழின் புன்னகை

அழகே..
என்னை தயங்கி தள்ள
செய்யும் பெண்மை தாங்கிய
அழகே..

அழகே..

அலையும் கண்ணை நீ
கொஞ்சம் நிறுத்தி
பார்க்கும் போது
நெஞ்சுக்குள் ஒரு தீ..
பற்றும் போது
பக்கத்தில் பருத்தி
இருப்பதை நீ அறிவாயா?

போகும் போக்கில் நீ
என்னை கடத்தி
பக்கம் வந்து
பதமாக படுத்தி
நித்தம் உன்னை
நினைக்கின்ற படியே
கற்பனை தந்திடுவாயா?

காதல் வைத்து
தேர்வொன்று நடத்தி
காலம் போக
மெதுவாக திருத்தி
வெள்ளை கண்ணின்
வெளிச்சத்தில் நிறுத்தி
பாடங்கள் சொல்லிடுவாயா?

இறகை போல
எடை உள்ள ஒருத்தி
லாபம் என்ன
நீ என்னை வருத்தி?
வானம் கூட
வசமாகி விடுமே
நீ என்னை
சேர்ந்திடுவாயா?

ஆசை ஒரு கண்ணில் அடடா..
தேவை மறு கண்ணில் அடடா..
இன்பம் ஒரு கண்ணில் அடடா..
இம்சை மறு கண்ணில் அடடடா..

மௌனம் ஒரு கண்ணில் அடடா..
மின்னல் மறு கண்ணில் அடடா..
கோபம் ஒரு கண்ணில் அடடா..
குழந்தை மறு கண்ணில் அடடடா..

நீ என்னை பார்க்கும்போது
என் மனம் என்ன சொல்லுது கேளு
மழை காற்றில் ஜன்னல் போலே
அது பட பட படவென அடிக்குது பாரு..

நீ வந்து பேசும் போது
உன் அழகிய ஜிமிக்கி தோடு
என் மனம் அந்த ஊஞ்சல் மேலே
அட கல கல கலவென சிரிக்குது பாரு..

ஓய் என் கண்ணழகியே..
ஓய் என் கண்ணழகியே..
   
பெண் :

விடியும் போது
தூக்கத்தை கெடுத்து
தினமும் உன் கையில்
தேனீரை கொடுத்து
அழகாய் நூறு
சண்டைக்கு இழுத்து
வாழ்ந்திடும் பெண்
நான் இல்லை..

சொல்லும் சொல்லில்
அர்த்தங்கள் எடுத்து
கொல்லும் கண்ணின்
ஆழத்தை படித்து
தெரியும் போது
தெரியாது நடித்து
இருந்திடும் நான்
ஒரு தொல்லை..

பழகும்போது
குழப்பங்கள் தடுத்து
விலகும்போது
விருப்பங்கள் தடுத்து
நெருங்கும் போது
தயக்கங்கள் தடுத்து
இருப்பது நிரந்தரம்
இல்லை.

இதயம் கேட்டு
ஒரு பாதி கொடுத்து
இடியை போல
மறு பாதி கொடுத்து
விதியை போல
என் காதல் கொடுத்து
தருவது என்
தவறு இல்லை..

ஆசை ஒரு கண்ணில் அதுதான்..
தேவை மறு கண்ணில் அதுதான்..
இன்பம் ஒரு கண்ணில் அதுதான்..
இம்சை மறு கண்ணில் ம்ம்..
 
மௌனம் ஒரு கண்ணில் அதுதான்..
மின்னல் மறு கண்ணில் அதுதான்..
கோபம் ஒரு கண்ணில் அதுதான்..
குழந்தை மறு கண்ணில் ம்ம்..

நீ என்னை பார்க்கும்போது
என் விழி அது வெளியே சாது
இருந்தும் ராட்டினம் போலே
அது சர சர சரவென சுழலது பாரு..

நீ வந்து பேசும் போது
என் மனம் என்ன சொல்லுது கேளு
விரல் தீண்டும் அலையை போலே
அது தர தர தரவென இழுக்குது பாரு..

ஓய் என் கண்ணழகியே..
ஓய் என் கண்ணழகியே..

--





         


Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்