ஓய் என் கண்ணழகியே..
ஓய் கண்ணழகியே பாடல் வரிகள் மற்றும் இசைக்கோர்வை. அழகே.. உன் குழலை கோத அந்த காற்றும் விரையுது.. அழகே.. உன் நிழலை தீண்ட அந்த நிலவும் கரையுது.. அழகே.. உன் குரலை கேட்க அந்த குயிலும் முழிக்குது.. அழகே.. உன் புழலை சேர என் உயிரும் துடிக்குது.. அழகே.. இலை போல உன் தேகம் இருப்பது ஏதுக்கடி? அழகே.. அதில் வடியும் நீராக நான் இருப்பது ஏன்? அழகே.. என்னை மயங்கி தாழ்த்தும் அந்த இதழின் புன்னகை அழகே.. என்னை தயங்கி தள்ள செய்யும் பெண்மை தாங்கிய அழகே.. அழகே.. அலையும் கண்ணை நீ கொஞ்சம் நிறுத்தி பார்க்கும் போது நெஞ்சுக்குள் ஒரு தீ.. பற்றும் போது பக்கத்தில் பருத்தி இருப்பதை நீ அறிவாயா? போகும் போக்கில் நீ என்னை கடத்தி பக்கம் வந்து பதமாக படுத்தி நித்தம் உன்னை நினைக்கின்ற படியே கற்பனை தந்திடுவாயா? காதல் வைத்து தேர்வொன்று நடத்தி காலம் போக மெதுவாக திருத்தி வெள்ளை கண்ணின் வெளிச்சத்தில் நிறுத்தி பாடங்கள் சொல்லிடுவாயா? இறகை போல எடை உள்ள ஒருத்தி லாபம் என்ன நீ என்னை வருத்தி? வானம் கூட வசமாகி விடுமே நீ என்னை சேர்ந்திடுவாயா? ஆசை ஒரு கண்ணில்...