Posts

Showing posts from February, 2018

கவிதை #1 - காதல்

படித்த/ரசித்த சில  சிறு  கவிதைகள் : முன்னிருக்கையில் யாரோ? முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ.. தாங்க முடியவில்லை. -   கல்யாண்ஜி ✤ ✤ ✤ பூங்கொடியே   உனக்குப் பூ   வாங்கி   வருகிறேன். முதன்முதலில்   தானம்   தர   ஆசைப்பட்டவன் கர்ணன்   வீட்டுக்   கதவைத் தட்டியது   மாதிரி ! -          -   மீரா ✤ ✤ ✤ ஒரு   வண்ணத்துப்   பூச்சி உன்னைக்   காட்டி என்னிடம்   கேட்கிறது "ஏன்   இந்தப்   பூ நகர்ந்துகொண்டே   இருக்கிறது ?"  என்று ! -          -   தபு   ஷங்கர் ✤ ✤ ✤ மல்லிகை   பூ   தான் விற்கிறார்கள்   தெருவில் . ஆனால்   எனக்கோ அவள்   வாசமே   வீசுகிறது .. -  வித்யாசாகர் ✤ ✤ ✤ எப்படிப்   பாதுகாக்க? குடைக்   கம்பியில் உன்   கைரேகை. -      ...

தமிழும் பேசுவோம் #1

Bro: ஆண் நண்பர்கள் இன்னொரு ஆண் நண்பரை / நபரை   "Bro" என்று அழைக்கிறாங்க .. இது "Brother" என்பதன் சுருங்கிய வடிவம் தான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி . இருந்த போதும் பெண் நண்பர்கள் தங்களின் தோழியையும் "Bro" னு சொல்லி அழைப்பதை பார்க்க நேர்ந்தது . இங்க அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லை .. [ அக்கா - வை அண்ணா - னு சொல்ற மாதிரி இருக்கு L ] ஆனா, தமிழ் மொழியில இந்த சிக்கலுக்கு ஒரே வார்த்தை போதும். அந்த வார்த்தை " சகோ ". சகோ - சகோதரர் என்பதன் குறும் வடிவம் . சகோ - சகோதரி   என்பதன் குறும் வடிவமாகவும் சொல்லலாம் . அதனால் , சகோ என்ற சொல்   ஆண் / பெண்   இருவருக்கும்  பொதுவா இருக்கும் . "Bro” பதிலா சகோ ..   பேசி பார்ப்போம்.. Dude: கணினி துறையில் உடன் வேலை செய்பவர்களை "Dude" என்கிறோம் .  "Dude" என்பதின் ஆதி அர்த்தம் " பகட்டாக ஆடை அணிந்த ஆண் " என்று விக்கி - பீடியா   சொல்கிறது . தமிழ் மொழியில் சக வேலை செய்யும் நண்பர்களை அழ...