கவிதை #1 - காதல்

படித்த/ரசித்த சில சிறு கவிதைகள் :

முன்னிருக்கையில் யாரோ?
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ..
தாங்க முடியவில்லை.
-  கல்யாண்ஜி


பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்.
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி!
-        -  மீரா


ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
"ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?" என்று!
-        -  தபு ஷங்கர்


மல்லிகை பூ தான்
விற்கிறார்கள் தெருவில்.
ஆனால் எனக்கோ
அவள் வாசமே வீசுகிறது..
வித்யாசாகர்


எப்படிப் பாதுகாக்க?
குடைக் கம்பியில்
உன் கைரேகை.
-      -  அறிவுமதி


     குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
அவள் மறந்து வைத்த 
மஞ்சள் கிழங்கு.
-       -  பிரான்சிஸ் கிருபா

 

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
-      -  தபு ஷங்கர்


Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..