தமிழும் பேசுவோம் #1
Bro:
ஆண்
நண்பர்கள் இன்னொரு ஆண் நண்பரை/நபரை "Bro" என்று அழைக்கிறாங்க..
இது
"Brother" என்பதன்
சுருங்கிய வடிவம் தான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி.
இருந்த
போதும் பெண் நண்பர்கள் தங்களின் தோழியையும் "Bro"
னு சொல்லி அழைப்பதை பார்க்க நேர்ந்தது.
இங்க
அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லை.. [அக்கா-வை அண்ணா-னு
சொல்ற மாதிரி இருக்கு L]
ஆனா, தமிழ்
மொழியில இந்த சிக்கலுக்கு ஒரே வார்த்தை போதும்.
அந்த வார்த்தை
"சகோ".
சகோ
- சகோதரர் என்பதன் குறும் வடிவம்.
சகோ
- சகோதரி என்பதன்
குறும் வடிவமாகவும் சொல்லலாம்.
அதனால்,
சகோ என்ற சொல் ஆண்/பெண் இருவருக்கும் பொதுவா இருக்கும்.
"Bro” பதிலா
சகோ.. பேசி
பார்ப்போம்..
Dude:
கணினி
துறையில் உடன் வேலை செய்பவர்களை
"Dude" என்கிறோம்.
"Dude" என்பதின் ஆதி அர்த்தம் "பகட்டாக ஆடை அணிந்த ஆண்" என்று விக்கி-பீடியா சொல்கிறது.
தமிழ்
மொழியில் சக வேலை செய்யும்
நண்பர்களை அழைக்க "சகா" என்ற சொல் இருக்கு..
"Dude" என்பதின் மாற்று
சொல் "சகா"..
இன்னொரு
சிறப்பு, இந்த வார்த்தைகளை சமுக ஊடகங்களில் [WhatsApp,
Facebook] எளிமையாக
பயன்படுத்தலாம்.
வேறு நல்ல தமிழ் சொற்கள் இதே அர்த்ததில் நீங்கள் உபயோக படுத்தினால் / உபயோகபடுத்தி இருந்தால் பதிவிடுங்க [comments].
தமிழும் பேசுவோம்.. :)
Comments
Post a Comment