Posts

Showing posts from December, 2018

கவிதை - இயற்கை

ரசித்த சில கவிதைகள்: இரை தேடிப்போன பறவை  இருட்டிய பிறகும்  கூடு திரும்பாததால் தூக்கமின்றித் தவிக்கிறது மரம்! - ரவிகிருஷ் ✦ யாருமற்ற  தன் சவ ஊர்வலத்தில் தானே நடனமாடிக் கடக்கும் பழுத்த இலை.  - நாகராஜ சுப்ரமணி ✦ நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும் ஒரு பூவைப் பார்த்துவிட்டு பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி அவசர அவசரமாகக் கண்களை மூடிக் கடவுளை வேண்டுகிறாள் ஒரு வேகமான காற்று வேண்டி. - பிரபு ✦ ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு  என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. - கல்யாண்ஜி ✦ பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும். - நாஞ்சில்நாடன்

இசை - ஸ்னேகலோகா - நடுவன்

சரிகமபதநி : இசையில் "சரிகமபதநி"  என்பதன் அர்த்தம் ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஒலியை  [ஓசை]  குறிக்கிறதாம். ச [சட்ஜம்] என்பது மயிலின் ஒலி. ரி [ரிசபம்] என்பது எருதின் ஒலி. க [காந்தாரம்] என்பது ஆட்டின் ஒலி. ம [மத்திமம்] என்பது கோழியின் ஒலி. ப [பஞ்சமம்] என்பது குயிலொலி. த [தைவதம்] என்பது குதிரையொலி. நி [நிசாதம்] என்பது யானையொலி. மயில், எருது, ஆடு, கோழி, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிப்பு அடிப்படைகள் பண்ணொலிகளாகத் திகழ்கின்றன. ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ ஸ்னேகலோகா : கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட பாடல் இது. 1999 ஆம் ஆண்டில் ஹம்சலேகா அவர்களால் இசைஅமைக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, சித்ரா இருவரும் பாடி இருக்கிறார்கள். பாடலின் சரணம் மூச்சு இடைவெளி இன்றி தொடர்ந்து பாடப்பட்டு இருக்கும். பாடல் வரிகள் காதலை பற்றியது.அர்த்தம் முழுவதும் தெரியாது எனினும் இசையை ரசிக்கலாம். இசைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை அல்ல தானே.?    இசை வடிவம்: https://www.youtube.com/watch?v=XyjPmxlzaPY கன்னடத்தில் "ப்ரீத்தி" என்பது "காதலை" குறிக்கும். ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫...