கவிதை - இயற்கை
ரசித்த சில கவிதைகள்:
இரை தேடிப்போன பறவை
இருட்டிய பிறகும்
கூடு திரும்பாததால்
தூக்கமின்றித் தவிக்கிறது மரம்!
- ரவிகிருஷ்
✦
யாருமற்ற
தன் சவ ஊர்வலத்தில்
தானே நடனமாடிக் கடக்கும்
பழுத்த இலை.
- நாகராஜ சுப்ரமணி
✦
நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடிக்
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி.
- பிரபு
✦
ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
- கல்யாண்ஜி
✦
பித்தப்பூ
பங்கயப் பூ நாறும்
நயந்து இனித்த சுண்டு
அதனில்
பதியாத முத்தப்பூ
மூச்செறிந்து
சொல் களைந்து
வாடாது
காற்றில்
பித்தப் பூவாய்
கலந்து அலையும்.
- நாஞ்சில்நாடன்
இரை தேடிப்போன பறவை
இருட்டிய பிறகும்
கூடு திரும்பாததால்
தூக்கமின்றித் தவிக்கிறது மரம்!
- ரவிகிருஷ்
✦
யாருமற்ற
தன் சவ ஊர்வலத்தில்
தானே நடனமாடிக் கடக்கும்
பழுத்த இலை.
- நாகராஜ சுப்ரமணி
✦
நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடிக்
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி.
- பிரபு
✦
ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
- கல்யாண்ஜி
✦
பித்தப்பூ
பங்கயப் பூ நாறும்
நயந்து இனித்த சுண்டு
அதனில்
பதியாத முத்தப்பூ
மூச்செறிந்து
சொல் களைந்து
வாடாது
காற்றில்
பித்தப் பூவாய்
கலந்து அலையும்.
- நாஞ்சில்நாடன்
Comments
Post a Comment