Posts

Showing posts from March, 2018

கவிதை - கமல் ஹாசன்

கமல் ஹாசன் அவர்களின் " மனித வணக்கம் "  கவிதை வரிகள் ரசிக்க .. தாயே , என்   தாயே ! நான் உரித்த தோலே அறுத்த கொடியே என் மனையாளின் மானசீக சக்களத்தி , சரண் . தகப்பா , ஓ   தகப்பா ! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று . புரியாத வரியிருப்பின் கேள் ! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன் . தமையா , ஓ தமையா ! என் தகப்பனின் சாயல் நீ . அச்சகம் தான் ஒன்று இங்கே அர்த்தங்கள் வெல்வேறு . தமக்காய் , ஓ தமக்காய் ! தோழி , தொலைந்தே போனாயே ? துணை தேடி போனாயே ? மனைவி , ஓ காதலி ! நீ தாண்டா படியெல்லாம் நான் தாண்ட குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை . மகனே , ஓ மகனே ! என் விந்திட்ட விதையே செடியே , மரமே , காடே மறு பிறப்பே மரண சௌகர்யமே , வாழ் ! மகளே , ஓ மகளே ! நீயும் என் காதலியே எனதம்மை போல எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா ? இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா ? நண்பா , ஓ நண்பா ! நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் ...

கவிதை # 3 - யுகபாரதி

கவிஞர் யுகபாரதி அவர்களின் சில கவிதைகள் ரசிக்க .. வளையல் : உடைந்தால் கலங்குவாயென்று இரப்பர் வளையல்கள் வாங்கினேன் ! நீயோ அளவு சரியில்லையென்று இளைக்கத் தொடங்கிவிட்டாயே ! ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ வீடு : ஓரங்கிழிந்த பாய் காரைபெயர்ந்த சுவர் ஒட்டடை படிந்த ஜன்னல் ஓசை எழுப்பும் மின் விசிறி கலைந்த தலையணை கழுவாத பாத்திரம் என்றாலும் என் வீடு இனிது ! ஏனெனில் , எதிர் வீடு உனது ...!! ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ பெண் : நான் பெண்களை மோசமானவர்களாகக் கருதுவது , அவர்களின் நடத்தையினால் அல்ல அன்பினால் ..! அன்பினால்   எல்லா மோசத்தையும் செய்துவிடுகிறார்கள் .. சமயத்தில் மோசத்தையே அன்பாகவும் .. ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ துணை கேட்கும் இரவுகள் : இரவுகளை துரத்த முடியவில்லை அவை என்னிலிருந்து வெளியேற நிறைய கேட்கின்றன துணையைக் கேட்கும் அந்த இரவுகள் என் தனிமையை பயன்படுத்திக் கொள்கின்றன விலகவே மாட்டேன் என்பது போல அழிச்சாட்டியம் பண்ணும் இரவுகளிடமிருந்து தப்பிப்பது பெரும்பாடாகிவிடுகிறது ...

கவிதை # 2 -சில கேள்விகள்

பழனி   பாரதி   அவர்களின்   " பெண்   சில   கேள்விகள் "  கவிதை  : முதன்   முதலாக பெண்ணை   வருணிக்கத் தேர்ந்தெடுத்த   வார்த்தை   எது ? ஆதாமின்   முத்தம்   ஏவாளின்   எந்த   பாகத்திற்கு   முதலில்   கிடைத்திருக்கும் ? பெண்ணின்   கூந்தலுக்கு   முதன்முதலில்   சூட்டப்பட்ட   பூ   எது ? பெண்   முதன்   முதலில் எதற்காக   ஆடைக்குள்   தன்னை   மறைத்துக்   கொண்டாள் ? பெண்ணின்   கண்ணீர்   முதன்   முதலில் எதன்   பொருட்டு சிந்தப்பட்டிருக்கும் ? கற்பென்பது   முதன்   முதலில் எந்தப்   பெண்   மீது எதற்காகத்   திணிக்கப்பட்டது ? முதன்முதலாய்   உடன்கட்டை   ஏற்றப்பட்ட   பெண்   உயிரோடு   எரிகையில்   கடைசியாய்   என்ன   நினைத்திருப்பாள் ? வரதட்சணையால் சபிக்கப்பட்ட முதல்   முதிர்கன்னி   மாதவிலக்கும்   நின்று   போனதை ...