கவிதை # 2 -சில கேள்விகள்

பழனி பாரதி அவர்களின்  "பெண் சில கேள்விகள்கவிதை :

முதன் முதலாக
பெண்ணை வருணிக்கத்
தேர்ந்தெடுத்த வார்த்தை எது?

ஆதாமின் முத்தம் 
ஏவாளின் 
எந்த பாகத்திற்கு 
முதலில் கிடைத்திருக்கும்?

பெண்ணின் கூந்தலுக்கு 
முதன்முதலில் 
சூட்டப்பட்ட பூ எது?

பெண் 
முதன் முதலில்
எதற்காக 
ஆடைக்குள் தன்னை 
மறைத்துக் கொண்டாள்?

பெண்ணின் கண்ணீர் 
முதன் முதலில்
எதன் பொருட்டு
சிந்தப்பட்டிருக்கும்?

கற்பென்பது 
முதன் முதலில்
எந்தப் பெண் மீது
எதற்காகத் திணிக்கப்பட்டது?

முதன்முதலாய் 
உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண் 
உயிரோடு எரிகையில் 
கடைசியாய் 
என்ன நினைத்திருப்பாள்?

வரதட்சணையால்
சபிக்கப்பட்ட
முதல் முதிர்கன்னி 
மாதவிலக்கும் நின்று போனதை
யாரிடம் சொல்லியிருப்பாள்?

தாய்ப்பாலுக்குப் பதிலாக 
கள்ளிப்பால் ஊட்டப்பட்ட 
முதல் பெண்சிசு எது?

ஆண்களின் தேசத்தில்
கேள்விகளுக்குள் சிக்கிய
பெண்ணை மீட்க
எந்தப் பெண் 
முதன்முதலில் 
போராளியானாள்?

அவளின் 
கடைசி வாரிசிடம் கொடுத்து
கிழித்தெறியச் சொல்லுங்கள்
இந்தக் கவிதையை....

--

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள் .. 

Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..