மணமகன் சத்தியம்

திருமணத்தில் மணமகன் தன் வாழ்க்கை துணை நோக்கி அவனின் கனவுகளை, அன்பை,  சொல்லிடும் பாடலின் அழகிய கவிதை..

கண்ணே கனியே உனை
கை விட மாட்டேன்..
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

மாலை சூடிய காலை
கதிரின் மேலே..
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்.
பிறிதோர் பக்கம் மனம் சாயா
பிரியம் காப்பேன்

செல்ல கொலுசு சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம்
பதித்து நித்தம் எழுவேன்..

கை பொருள் யாவையும்
கரைத்தாலும் கணக்கு கேளேன்.
ஒவ்வொரு வாதமும் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்..

கண்ணே கனியே 
உனை கை விட மாட்டேன்..

அர்த்த ஜாம திருடன் போலே
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிழும்
என் காதல், தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியொடு நீ விழுந்தால்
தாய் மடி ஆவேன்..

சுவாசம் போல அருகில் இருந்து
சுக பட வைப்பேன்.
உந்தன்  உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்..

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்..
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்.

கண்ணே கனியே உனை
கை விட மாட்டேன்..
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

-
இந்த கவிதைக்கு திரு.ரகுமான் இசை.. 

இந்த தேன் தமிழ் பாடலுக்கு, மலையாள நடனம் இணைத்து இணையத்தில் உலவும் அழகிய கலை வடிவம்.

Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..