மணமகள் சத்தியம்

திருமணத்தில் மணமகள் தன் வாழ்க்கை துணை நோக்கி அவளின் கனவுகளை, அன்பை, சொல்லிடும் அழகிய கவிதை..

காதல் கணவா, உந்தன்
கரம் விட மாட்டேன்.
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

தாய் வழி வந்த பெண்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..

வாழை மரம் போல
என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்.

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்.
உனது உலகை எனது
கண்ணில் பார்த்திட செய்வேன்

மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மலை காற்றாய் தலை கோதி
நித்திரை தருவேன்.

காதல் கணவா, உந்தன்
கரம் விட மாட்டேன்.
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

உனது உயிரை எனது
வயிற்றில் ஊற்றி கொள்வேன்.
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்.

காலம் மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்.
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்.

அழகு பெண்கள்
பழகினாலும்
ஐயம் கொள்ளேன்.
உன் ஆண்மை
நிறையும் போதும் உந்தன்
தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்.
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்.

காதல் கணவா, உந்தன்
கரம் விட மாட்டேன்.
சத்தியம் சத்தியம் இது சத்தியமே.

-
இந்த கவிதைக்கு திரு.ரகுமான் அவர்கள் இசை..

இசை வடிவம்:
https://www.youtube.com/watch?v=qp8DfRvX4ac

Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..