Posts

ஓய் என் கண்ணழகியே..

Image
ஓய் கண்ணழகியே பாடல் வரிகள் மற்றும் இசைக்கோர்வை. அழகே.. உன் குழலை கோத அந்த காற்றும் விரையுது.. அழகே.. உன் நிழலை தீண்ட அந்த நிலவும் கரையுது.. அழகே.. உன் குரலை கேட்க அந்த குயிலும் முழிக்குது.. அழகே.. உன் புழலை சேர என் உயிரும் துடிக்குது.. அழகே.. இலை போல உன் தேகம் இருப்பது ஏதுக்கடி? அழகே.. அதில் வடியும் நீராக நான் இருப்பது ஏன்? அழகே.. என்னை மயங்கி தாழ்த்தும் அந்த இதழின் புன்னகை அழகே.. என்னை தயங்கி தள்ள செய்யும் பெண்மை தாங்கிய அழகே.. அழகே.. அலையும் கண்ணை நீ கொஞ்சம் நிறுத்தி பார்க்கும் போது நெஞ்சுக்குள் ஒரு தீ.. பற்றும் போது பக்கத்தில் பருத்தி இருப்பதை நீ அறிவாயா? போகும் போக்கில் நீ என்னை கடத்தி பக்கம் வந்து பதமாக படுத்தி நித்தம் உன்னை நினைக்கின்ற படியே கற்பனை தந்திடுவாயா? காதல் வைத்து தேர்வொன்று நடத்தி காலம் போக மெதுவாக திருத்தி வெள்ளை கண்ணின் வெளிச்சத்தில் நிறுத்தி பாடங்கள் சொல்லிடுவாயா? இறகை போல எடை உள்ள ஒருத்தி லாபம் என்ன நீ என்னை வருத்தி? வானம் கூட வசமாகி விடுமே நீ என்னை சேர்ந்திடுவாயா? ஆசை ஒரு கண்ணில்...

கவிதை - இயற்கை

ரசித்த சில கவிதைகள்: இரை தேடிப்போன பறவை  இருட்டிய பிறகும்  கூடு திரும்பாததால் தூக்கமின்றித் தவிக்கிறது மரம்! - ரவிகிருஷ் ✦ யாருமற்ற  தன் சவ ஊர்வலத்தில் தானே நடனமாடிக் கடக்கும் பழுத்த இலை.  - நாகராஜ சுப்ரமணி ✦ நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும் ஒரு பூவைப் பார்த்துவிட்டு பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி அவசர அவசரமாகக் கண்களை மூடிக் கடவுளை வேண்டுகிறாள் ஒரு வேகமான காற்று வேண்டி. - பிரபு ✦ ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு  என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. - கல்யாண்ஜி ✦ பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும். - நாஞ்சில்நாடன்

இசை - ஸ்னேகலோகா - நடுவன்

சரிகமபதநி : இசையில் "சரிகமபதநி"  என்பதன் அர்த்தம் ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஒலியை  [ஓசை]  குறிக்கிறதாம். ச [சட்ஜம்] என்பது மயிலின் ஒலி. ரி [ரிசபம்] என்பது எருதின் ஒலி. க [காந்தாரம்] என்பது ஆட்டின் ஒலி. ம [மத்திமம்] என்பது கோழியின் ஒலி. ப [பஞ்சமம்] என்பது குயிலொலி. த [தைவதம்] என்பது குதிரையொலி. நி [நிசாதம்] என்பது யானையொலி. மயில், எருது, ஆடு, கோழி, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிப்பு அடிப்படைகள் பண்ணொலிகளாகத் திகழ்கின்றன. ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ ஸ்னேகலோகா : கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட பாடல் இது. 1999 ஆம் ஆண்டில் ஹம்சலேகா அவர்களால் இசைஅமைக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, சித்ரா இருவரும் பாடி இருக்கிறார்கள். பாடலின் சரணம் மூச்சு இடைவெளி இன்றி தொடர்ந்து பாடப்பட்டு இருக்கும். பாடல் வரிகள் காதலை பற்றியது.அர்த்தம் முழுவதும் தெரியாது எனினும் இசையை ரசிக்கலாம். இசைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை அல்ல தானே.?    இசை வடிவம்: https://www.youtube.com/watch?v=XyjPmxlzaPY கன்னடத்தில் "ப்ரீத்தி" என்பது "காதலை" குறிக்கும். ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫...

மணமகள் சத்தியம்

திருமணத்தில் மணமகள் தன் வாழ்க்கை துணை நோக்கி அவளின் கனவுகளை, அன்பை, சொல்லிடும் அழகிய கவிதை.. காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம் சத்தியம் இது சத்தியமே. தாய் வழி வந்த பெண்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே. ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது.. வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன். கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன். உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன் மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன் மலை காற்றாய் தலை கோதி நித்திரை தருவேன். காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம் சத்தியம் இது சத்தியமே. உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன். உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன். காலம் மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன். கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன். அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன். உன் ஆண்மை நிறையும் போதும் உந்தன் தாய் போல் இருப்பேன் உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன். உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன். காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம...

மணமகன் சத்தியம்

திருமணத்தில் மணமகன் தன் வாழ்க்கை துணை நோக்கி அவனின் கனவுகளை, அன்பை,  சொல்லிடும் பாடலின் அழகிய கவிதை.. கண்ணே கனியே உனை கை விட மாட்டேன்.. சத்தியம் சத்தியம் இது சத்தியமே. மாலை சூடிய காலை கதிரின் மேலே.. சத்தியம் சத்தியம் இது சத்தியமே. ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது.. இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன். பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் செல்ல கொலுசு சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்.. கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன். ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்.. கண்ணே கனியே  உனை கை விட மாட்டேன்.. அர்த்த ஜாம திருடன் போலே அதிர்ந்து பேசேன் காமம் தீரும் பொழுதிழும் என் காதல், தீரேன் மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன் நோய் மடியொடு நீ விழுந்தால் தாய் மடி ஆவேன்.. சுவாசம் போல அருகில் இருந்து சுக பட வைப்பேன். உந்தன்  உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்.. உன் க...

கவிதை - கமல் ஹாசன்

கமல் ஹாசன் அவர்களின் " மனித வணக்கம் "  கவிதை வரிகள் ரசிக்க .. தாயே , என்   தாயே ! நான் உரித்த தோலே அறுத்த கொடியே என் மனையாளின் மானசீக சக்களத்தி , சரண் . தகப்பா , ஓ   தகப்பா ! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று . புரியாத வரியிருப்பின் கேள் ! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன் . தமையா , ஓ தமையா ! என் தகப்பனின் சாயல் நீ . அச்சகம் தான் ஒன்று இங்கே அர்த்தங்கள் வெல்வேறு . தமக்காய் , ஓ தமக்காய் ! தோழி , தொலைந்தே போனாயே ? துணை தேடி போனாயே ? மனைவி , ஓ காதலி ! நீ தாண்டா படியெல்லாம் நான் தாண்ட குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை . மகனே , ஓ மகனே ! என் விந்திட்ட விதையே செடியே , மரமே , காடே மறு பிறப்பே மரண சௌகர்யமே , வாழ் ! மகளே , ஓ மகளே ! நீயும் என் காதலியே எனதம்மை போல எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா ? இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா ? நண்பா , ஓ நண்பா ! நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் ...

கவிதை # 3 - யுகபாரதி

கவிஞர் யுகபாரதி அவர்களின் சில கவிதைகள் ரசிக்க .. வளையல் : உடைந்தால் கலங்குவாயென்று இரப்பர் வளையல்கள் வாங்கினேன் ! நீயோ அளவு சரியில்லையென்று இளைக்கத் தொடங்கிவிட்டாயே ! ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ வீடு : ஓரங்கிழிந்த பாய் காரைபெயர்ந்த சுவர் ஒட்டடை படிந்த ஜன்னல் ஓசை எழுப்பும் மின் விசிறி கலைந்த தலையணை கழுவாத பாத்திரம் என்றாலும் என் வீடு இனிது ! ஏனெனில் , எதிர் வீடு உனது ...!! ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ பெண் : நான் பெண்களை மோசமானவர்களாகக் கருதுவது , அவர்களின் நடத்தையினால் அல்ல அன்பினால் ..! அன்பினால்   எல்லா மோசத்தையும் செய்துவிடுகிறார்கள் .. சமயத்தில் மோசத்தையே அன்பாகவும் .. ⧪ ⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪⧪ துணை கேட்கும் இரவுகள் : இரவுகளை துரத்த முடியவில்லை அவை என்னிலிருந்து வெளியேற நிறைய கேட்கின்றன துணையைக் கேட்கும் அந்த இரவுகள் என் தனிமையை பயன்படுத்திக் கொள்கின்றன விலகவே மாட்டேன் என்பது போல அழிச்சாட்டியம் பண்ணும் இரவுகளிடமிருந்து தப்பிப்பது பெரும்பாடாகிவிடுகிறது ...